உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்காள பரமேஸ்வரி கோவில் தேரோட்டம்

அங்காள பரமேஸ்வரி கோவில் தேரோட்டம்

அரியாங்குப்பம் : பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நடந்த தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகோற்சவ விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி முதல், 4ம் தேதி வரை, அம்மன் வீதியுலா நடந்தது. 5ம் தேதி, இரவு அம்மன் சிங்க வாகனத்தில் வீதியுலா, ரணகளிப்பு நிகழ்ச்சி நடந்தது. முக்கிய விழாவான, நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.சபாநாயகர் செல்வம் உட்பட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ