அப்போலோ மருத்துவமனை டாக்டர் 31ம் தேதி புதுச்சேரிக்கு வருகை
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் வெங்கட கார்த்திகேயன், வரும் 31ம் தேதி புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.புதுச்சேரி நுாறடி சாலை, எல்லைப்பிள்ளைச்சாவடி, என்.டி., மஹால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் வரும் 31ம் தேதி, காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கும் முகாமில், தலை, காது, மூக்கு, சைனஸ், பரோடிட் சுரப்பி, வாய், நாக்கு, பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புற்று நோய்களுக்கும், கழுத்து டான்சில், தொண்டை, குரல்வளை, உணவு குழாய், சுவாச குழாய்களில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புற்று நோய்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.மேலும், தைராய்டு, பாராதைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் கட்டிகள், புற்று நோய்களுக்கும், காது கேளாமை, தலை சுற்றல், பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். முன்பதிவிற்கு 0413- 4901083, 99446 63139, 82487 53248 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.