புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை வயிறு மற்றும் குடல் அறுவை சிறப்பு மருத்துவர் சுதீப்தா குமார் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண்.22, 14வது குறுக்கு தெருவில் உள்ள அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் நாளை 6ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.முகாமில், உணவு குழாய், கல்லீரல், கணையம், இரப்பை, பெருங்குடல், மலைக்குடல், குடல்வளரி, ஆசனவாய், மஞ்சள் காமாலை, குடல் இரக்கம், பித்தப்பை கற்கள், வயிற்று புண், மூலம் பிரச்னை, எரிச்சல் கொண்ட குடல் நோய்குறி, வயிற்குப் போக்கு, வயிற்று வலி, உணவு விழுங்குவதில் சிரமம், மஞ்சள் தோல், கண்கள் வயிறு மற்றும் குடல் புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.