உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா 

சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா 

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.விழாவில், பள்ளியின் தாளாளர் கிறிஸ்டிராஜ், பள்ளியின் முதல்வர் ஜெயந்தி ராணி ஆகியோர் கல்வி மற்றும் கபடி, கைப்பந்து, கோ கோ, பேட் மிண்டன், சதுரங்கம், கராத்தே, ஹாக்கி, அட்டியா - பட்டியா உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.இதில், பயிற்சி அளித்த அனைத்து ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். பள்ளியின் துணை முதல்வர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ