உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அகில இந்திய அளவில் சாதித்த மாணவருக்கு பாராட்டு

அகில இந்திய அளவில் சாதித்த மாணவருக்கு பாராட்டு

புதுச்சேரி: மாநிலத்தில் நீட் தேர்வில் முதலிடம், ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., நுழைவு தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி மாணவரை மக்கள் சேவகர் அசோக் ஆனந்தன் சால்வை அணிவித்து பாராட்டினார். தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த மாணவர் கிரிஷாந்த் அபினவ்  2026–27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வில் புதுச்சேரி மாநில அளவில் முதலிடமும், ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., நுழைவுத் தேர்விலும் இந்திய அளவில் முதலிடம் பெற்று நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதையடுத்து  தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பாக்கமுடையான்பேட்டை உடையார் தெருவில் உள்ள மாணவரின் இல்லத்திற்கு சென்ற மக்கள் சேவகர் அசோக் ஆனந்தன், மாணவருக்கு சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினார். பின் மாணவரின் பெற்றோர் முருகன் – பேரரசி ஆகியோரை வாழ்த்தினார். அப்போது பேசிய அசோக் ஆனந்தன், உழைப்பு, விடாமுயற்சி மற்றும் மனத் தைரியம் இருந்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்பதை கிரிஷாந்த் அபினவ் நிருபித்துள்ளார். இன்றைய மாணவர்கள் அனைவருக்கும் இவர் ஒரு முன்னுதாரணம். கல்வியிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற அறிவுடன் சேர்ந்து மனத் தைரியம் மிக அவசியம். தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேற வேண்டும்’ என்றார். மாணவர் கிரிஷாந்த் அபினவ், தன்னை ஊக்கப்படுத்திய அசோக் ஆனந்தனுக்கு நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி