தொலைநோக்கி மூலம் கிரகங்கள் பார்க்க ஏற்பாடு
புதுச்சேரி: லாஸ்பேட்டை அறிவியல் கழகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கோளரங்கம் சார்பில், கிரகங்கள் ஒரு நேர்கோட்டில் இணைவதை தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் பார்வையிட்டனர்.சூரியன், சனி, பூமி ஆகிய 3 கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரியன், சனி கிரகம் மற்ற நாள்களை விட பெரிதாக தெரியும். இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், லாஸ்பேட்டை அறிவியல் கழகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கோளரங்கம் சார்பில் லாஸ்பேட்டை மைதானத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தனர்.ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் தொலைநோக்கி மூலம் சனி கிரகத்தையும், அதனை சுற்றி பிரதிபலித்த கோட்டையும் பார்த்து ரசித்தனர்.பாரதிதாசன் மகளிர் கல்லுாரி இயற்பியில் துறை பேராசிரியர் மதிவாணன், வானில் நிகழும் நிகழ்வுகள் குறித்து அங்கு வந்த பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.