உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் கூட்டம்

கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் கூட்டம், இந்திரஜித் குப்தா படிப்பகத்தில் நடந்தது. மன்ற தலைவர் எல்லை சிவக்குமார் தலைமை தாங்கினார். பொது செயலாளர் பால கங்காதரன் பெருமன்ற வேலைகள், எதிர்கால கடமைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் பொருளாளர் துரை செல்வம், துணைத் தலைவர் விவேகானந்த தாசன், கலைமாமணி ஓவியர் முனிசாமி, செயலாளர் அன்புச்செல்வம், ஆசிரியை ஜெயஹூ, தங்கமணி, பரமேஸ்வரன், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இசை கலைஞர் ஜானகி, சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி ஆகியோரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் சிந்தனையாளர் ராகுல் சாங்கிருத்தியான் உருவச் சிலையை சேதப்படுத்திய வன்முறை கண்டித்து கோஷம் எழுப்பட்டது. ஆட்சி பொறுப்பு ஏற்று 60 நாட்கள் கடந்தும் அமைச்சர்களுக்கு இலகா அறிவிக்கப்படாத நிலையில் மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் பணியிடங்கள், ஓவியர்கள் முகாம், பாரதியார் பல்கலைக்கூடம் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைமாமணி விருது பெறுவதற்கு வல்லுநர்கள் குழுவால்  தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை