மேலும் செய்திகள்
ஜூலை 17ல் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
14-Jul-2026
புதுச்சேரி: ஜி.என்.பாளையம் சாந்த சொரூபிணி வராஹி அம்மன் கோவிலில் 2ம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ஜி.என்.பாளையம் செல்லமுத்து மாரியம்மன், ஐயனார், பிடாரியம்மன் தேவஸ்தானம், சாந்த சொரூபிணி வராஹி அம்மன் கோவிலில் 2ம் ஆண்டு, ஆஷாட நவராத்திரி விழா நேற்று முன்தினம் மாலை அபிேஷக ஆராதனையுடன் துவங்கியது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, அம்மனுக்கு சந்தன அலங்காரம் நடந்தது. நேற்று குங்கும அலங்காரம் நடந்தது. இன்று மஞ்சள் அலங்காரம் நடக்கிறது. நாளை இனிப்பு அலங்காரம், விசேஷ யாகம், சங்கல்பம் நடக்கிறது. 19ம் தேதி மாதுளை அலங்காரம், 20ம் தேதி காய்கனி அலங்காரம், 21ம் தேதி காய்கறி அலங்காரம், 22ம் தேதி தேங்காய் பூ அலங்காரம், 23ம் தேதி சொர்ண அலங்காரம், கோவில் பிரகாரத்தில் அம்மன் உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பழகன், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
14-Jul-2026