உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்.காங்., அசோக் ஆனந்தன் ராஜாஜி நகரில் ஓட்டு சேகரிப்பு

என்.ஆர்.காங்., அசோக் ஆனந்தன் ராஜாஜி நகரில் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, ராஜாஜி நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்.,  வேட்பாளர் அசோக் ஆனந்தன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ராஜாஜி நகர் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று அவர்களிடம், தட்டாஞ்சாவடி தொகுதியின் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் அன்றாட தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அதில், அப்பகுதி மக்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு மேம்பாட்டுப்  பணிகள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து அசோக் ஆனந்தனிடம் தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கவனமாக கேட்டவர், சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மேம்பாட்டுப் பணிகளை விரைவில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், பொதுமக்களுடன் தொடர்ந்து களத்தில் இருந்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதே தனது முக்கிய நோக்கம் என, அசோக் ஆனந்தன் தெரிவித்தார். தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவை எனவும் கூறினார். ஓட்டு சேகரிப்பின் போது, வேட்பாளர் அசோக் ஆனந்தனை அப்பகுதி மக்கள் மலர்துாவி வரவேற்று, கடந்தகால சேவைகள் மற்றும் பொதுமக்களுக்கு செய்து வரும் பல்வேறு உதவிகளை நினைவு கூர்ந்து பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி