மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
7 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
7 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
7 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
7 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், முல்லை நகரில் உள்ள சம்மேளன அலுவலகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் திருமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், சுகாதார சம்மேளன தலைவர் முனுசாமி, பொதுச்செயலாளர் ஜவகர், பொருளாளர் மணிவண்ணன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் பருவ முழைக்கு பின் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. டெங்கு கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, நகராட்சி, பொதுப்பணித்துறை, கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்துவதால் மட்டும் கட்டுப்படுத்தி விட முடியாது. டெங்கு கட்டுப்படுத்தும் பணியில் களத்தில் தீவிரமாக மேற்கொண்டால் தான் நல்ல முடிவு கிடைக்கும். டெங்கு கட்டுப்படுத்தும் பணி மேற்பார்வை செய்யும் சுகாதார ஆய்வாளர் பணியிடத்தில், 15 இடங்கள் காலியாக கிடக்கிறது. சுகாதார ஆய்வாளர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.பதவி உயர்வு மூலம் சுகாதார பணியாளர் நிரப்பும் பணியை துாரிதப்படுத்த வேண்டும். பதவி உயர்வு மூலம் காலியாகும் சுகாதார உதவியாளர் பணியிடங்களை, ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களுடன் சேர்த்து நிரப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சங்க அமைப்பு செயலாளர் கிரி நன்றி கூறினார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago