உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரெஸ்ட்டோ பார் உரிமையாளர் மீது தாக்குதல் 

ரெஸ்ட்டோ பார் உரிமையாளர் மீது தாக்குதல் 

புதுச்சேரி. ஜூலை 6–: மது வாங்குவதில் ஏற்பட்ட தகறாறில் பார் உரிமையாளரை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தமிழகப் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ்பீட்டர், 41. இவர் எல்லைப்பிள்ளைச்சாவடி சித்தானந்தா நகரில், ரெஸ்ட்டோ பார் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், இவரது தெரிந்த அருண்குமாரின் நண்பரான முத்து என்பவர் எம்.ஆர்.பி., விலைக்கு மது கேட்டார். பார் ஊழியரான டேவிட் தர மறுத்தார். இதனால் அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அருண்குமார், முத்து மற்றும் இரண்டு பேர் பாருக்கு வந்து, சார்லஸ்பீட்டரிடம் பேசுவதற்கு அழைத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அருண்குமார், முத்து மற்றும் இரண்டு பேர் சேர்ந்து, சார்லஸ்பீட்டரை தாக்கினர். சார்லஸ் பீட்டர் புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ