உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்

மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்

நெட்டப்பாக்கம்: மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.சூரமங்கலம் பேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி 60, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டை சுற்றி முள்வேலி அமைத்திருந்தார். இந்த முள்வேலியை அதே பகுதியைச் சேர்ந்த இருசப்பன் 36, என்பவர் பிடுங்கி எறிந்தார். இதனை தட்டிக்கேட்ட கலைச்செல்வி, அவரது மகள்கள் லட்சுமி, கலைவாணி ஆகியோரை ஆபாசமாக திட்டி, செங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். ஆத்திரம் அடங்காத இருசப்பன் கலைச்செல்வி வீட்டினுள் நுழைந்து வீட்டு உபயோகப் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார். கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ