மேலும் செய்திகள்
ஆவணி அவிட்டத்தில் பூணுால் மாற்றும் விழா
20-Aug-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் ஆவணி அவிட்ட விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் ஆவணி அவிட்ட விழா, வேதபுரீஸ்வரர் கோவிலில் நாளை காலை 10:00 மணிக்கு நடக்கிறது.நிகழ்ச்சியில், கீதா சங்கர் சாஸ்திரிகள் மற்றும் கீதா ராம் சாஸ்திரிகள் தலைமையில் மகா சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், பிரம்ம யக்ஞம், ரிஷி பூஜை, பித்ரு பூஜை, தர்ப்பணம், அவப்ருத ஸ்னானம், கண பூஜை, யக்ஞோபவீத தாரணம், ஹோமம், வேத ஆரம்பம் ஆகியவை நடக்கிறது. இதில் பங்கேற்பவர்கள், அரிசி, தேங்காய், புஷ்பம், பழம், வெற்றிலை பாக்கு, நெய், எள், சொம்பு உள்ளிட்ட தேவையான பொருட்களை கொண்டு வர வேண்டும்.
20-Aug-2024