மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
21-Aug-2024
பள்ளி, கல்லுாரி செய்திகள்
12-Aug-2024
புதுச்சேரி : தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் விருது வழங்கும் விழா நடந்தது.புதுச்சேரி, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியின் உள்தர மேம்பாட்டு அமைப்பும், டில்லி திவ்யா அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து மூன்றாம் ஆண்டாக, சகுந்தலா சக்தி தேசிய விருது -2024 வழங்கும் விழா, நேற்று காலை 10:00 மணி, பாரதியார் கருத்தரங்கக்கூடத்தில் நடந்தது. இந்த விழாவில் கல்லுாரி உள்தர மேம்பாட்டு அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் அனந்தலஷ்மி ேஹமலதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சசிகாந்த தாஸ் தலைமை உரையாற்றினார். இதில், மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும், புதுச்சேரி பாலாஜி வித்யா பீட துணைவேந்தர் நிகர் ரஞ்சன் பிஸ்வாஸ்; ஜிப்மர் ஆர்த்தோ பேராசிரியர் திலிப்குமார் பத்ரோ; அரவிந்தர் ஆசிரம ஆயுர்வேத டாக்டர் ரஷானந்தா மொகந்தா; நுாலக அறிவியல் ஆராய்ச்சியாளர் மணி ஆகியோருக்கு, சகுந்தலா சக்தி தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கும் பல்வேறு விருதுகளை திவ்யா அறக்கட்டளை நிறுவனர் திவ்யா வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி உள்தர மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலுராஜ் நன்றி கூறினார்.
21-Aug-2024
12-Aug-2024