உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழா

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழா

பாகூர்: அரங்கனுாரில் அய்யா வைகுண்டர் சுவாமியின் 193வது அவதார தின விழா நடந்தது. பாகூர் அடுத்துள்ள அரங்கனுார் எரமுடி அய்யனார் கோவில் அருகே அய்யா வைகுண்டர் புதுவைப்பதி கோவில் அமைந்துள்ளது. இங்கு, அய்யா வைகுண்டர் சுவாமியின் 193வது அவதார தினவிழா நேற்று நடந்தது. காலை 6.00 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமிக்கு, பால் வைத்தலும், காலை 6.30 மணிக்கு புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து கடல் பதம் (தீர்த்தம்) கொண்டு வரப்பட்டது. காலை 8.00 மணிக்கு உகபடிப்பு, 12.00 மணிக்கு வைகுண்ட சுவாமிக்கு பணிவிடை மற்றும் உச்சி படிப்பு நிகழ்ச்சி நடந்தது. பவர் சோப் நிர்வாக இயக்குனர் தனபால் அன்னதானம் வழங்கினார். மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டருக்கு பால் வைத்தல் நிகழ்ச்சி, 5.00 மணிக்கு உகபடிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, அய்யா வைகுண்டர்பதி அய்யாவழி பக்தர்களும், கிராம மக்களும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை