உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் அரசு பெண்கள் பள்ளியில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

பாகூர் அரசு பெண்கள் பள்ளியில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி : பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஆங்கிலப் விரிவுரையாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் வாணி, நல்லாசிரியர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு ரெயின்கோர்ட் வழங்கி, வாழ்த்துரை வழங்கினார். ஏற்பாடுகளை விரிவுரையாளர் முத்துக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். விரிவுரையாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை