உள்ளூர் செய்திகள்

வங்கி ஊழியர் மாயம்

 : புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியில் சென்ற தனியார் வங்கி ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  லாஸ்பேட்டை பிரசாந்தி தெருவை சேர்ந்த கிருஷ்ணதாஸ் மகன் அனந்தராமன், 40; இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். மாலை வரை வீட்டுக்கு வராததால், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.  இதுகுறித்து, புகாரின் பேரில், லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை