மேலும் செய்திகள்
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
15-Feb-2025
புதுச்சேரி: அகில இந்திய அனைத்து வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் தொழிற் சங்க கூட்டமைப்பு (யு.எப்.பி.யு.) சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் சுய்ப்ரேன் வீதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை அருகில் நடந்தது.யு.எப்.பி.யு. கன்வினர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.பி.இ.ஏ. ரவீந்திரன் வரவேற்றார். ஐபோக் தலைவர் ரஞ்சித், செயலாளர் செந்தில்குமார், இந்தியன் வங்கி செயற்குழு உறுப்பினர் ராணி, ரீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், வங்கி அனைத்து பிரிவு ஊழியர்கள், அலுவலர்கள் பணி நியமனம் மற்றும் அனைத்து தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும்.பொதுத்துறை வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. எஸ்.பி.ஐ. வங்கி உதவி பொதுச்செயலாளர் நித்திஷ் நன்றி கூறினார்.
15-Feb-2025