மேலும் செய்திகள்
வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கல்
30-Aug-2024
திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் வங்கி மேலாளர் மயங்கி விழுந்து இறந்தார். திருக்கனுார் அடுத்த சந்தை புதுக்குப்பம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் தனது பைக்கில் காட்டேரிக்குப்பம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். லிங்காரெட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, ராஜேந்திரன் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார்.அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர் பரிசோதித்து ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தார். காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Aug-2024