உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பரதநாட்டியம் பரிசளிப்பு விழா

பரதநாட்டியம் பரிசளிப்பு விழா

புதுச்சேரி : நைனார்மண்டபம் சுப்பரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கேடயம் வழங்கினார். புதுச்சேரி நைனார்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள திருச்செந்துார் சுப்பரமணிய சுவாமி கோவிலில் 15ம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழா நடந்து வருகிறது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்று பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கலந்து கொண்டு பரதநாட்டிய மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை