மேலும் செய்திகள்
நாங்கள் அரசியல் கட்சி இல்லை; சொல்கிறார் ஓபிஎஸ்
1 hour(s) ago | 5
ராஜ் தாக்கரே உடன் கை கோர்க்கிறார் ஏக்நாத் ஷிண்டே
1 hour(s) ago | 1
உயிரை பறித்த சர்ச்சை வீடியோ பதிவிட்ட பெண் கைது
2 hour(s) ago | 13
மயிலம், : மயிலம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த வெளியனுார் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 55; இவர், நேற்று இரவு 8:00 மணிக்கு, கூட்டேரிப்பட்டு வாரச் சந்தையில் பொருட்களை வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மைலம் அருகே கொல்லியங்குணம் வி.ஐ.பி., சிட்டி அருகே வந்தபோது, எதிரே கள்ளகொளத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகன் யுவராஜ், 24; என்பவர் வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. விபத்தில், ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யுவராஜ் பலத்த காயமடைந்தார்.தகவலின்பேரில் மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த யுவராஜை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
1 hour(s) ago | 5
1 hour(s) ago | 1
2 hour(s) ago | 13