பைக் மாயம்
புதுச்சேரி: பைக் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சேதராப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 39; டிரைவர். இவர் கடந்த 4ம் தேதி, தனது ஹோண்டா யூனிகார்ன் பைக்கை (பி.ஓய்.01.சிசி.3498) சேதராப்பட்டு, தொண்டமாநத்தம் மெயின்ரோட்டில் உள்ள தனியார் மதுபானக் கடை அருகே நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வண்டியை காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.