மேலும் செய்திகள்
பைக் மாயம் போலீஸ் விசாரணை
09-Jul-2026
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதலியார்பேட்டை விவேகானந்தர் வீதி, கடலுார் ரோட்டை சேர்ந்தவர் மதிவதணன்,64; அதே பகுதியில் உள்ள கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். கடந்த 26ம் தேதி தனது பைக்கை (பி.ஒய்.01.டிபி.3988) கம்பெனி அருகில் நிறுத்திவிட்டு, சாவியை அங்குள்ள கபோர்டில் வைத்து விட்டு சென்றார். மீண்டும் மாலை வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. அவர் விசாரித்தில், புதிதாக அங்கு வேலைக்கு சேர்ந்த கடலுார் சுரேந்தின், பைக்கை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மதிவதணன் கொடுத்த புகாரின் பேரில், முதலியார் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Jul-2026