உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊசுட்டேரியில் படகு சவாரி: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊசுட்டேரியில் படகு சவாரி: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

புதுச்சேரி : தாமரை மலர்கள் பூத்து குலுங்கும் ஊசுட்டேரியின் அழகினை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.புதுச்சேரி என்றாலே அதனுடைய அழகான கடற்கரையும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால், இவற்றைத் தாண்டி ரசிக்கப்படும் இன்னொரு விஷயம் இயற்கை எழில் கொஞ்சும் ஊசுட்டேரி.புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் 850 ஹெக்டேரில் பரந்து விரிந்த ஊசுட்டேரியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்காக நவம்பர் மாதம் முதல் வருகை தருகின்றன.இதனால், பறவைகள் சரணாலயமாகவும் ஊசுட்டேரி அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியில் தேசிய மலரான தாமரை மலர்கள் பூத்து குலுங்கி, ரம்யமாக காட்சியளிக்கின்றன. பூத்து குலுங்கும் தாமரை செடிகளுக்கு இடையில் பறவைகள் குடும்பத்துடன் முகாமிட்டு, இரை தேடுகின்றன. இந்த அழகிய காட்சியை காண அதிகாலையிலும், அந்திசாயமும்போதும் ஊசுட்டேயில் சுற்றுலா பயணிகளும் குவிந்து வருகின்றனர். அப்படியே படகில் சென்று காணவும் ஆர்வம் காட்டுவதால் ஊசுட்டேரி களை கட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ