பாரதியார் பல்கலை கூடத்தின் முதல்வராக போஸ் நியமனம்
புதுச்சேரி: புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழகக் கூடத்தின் புதிய பொறுப்பு முதல்வராக இசைத்துறை உதவிப் பேராசிரியர் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அதிரடி உத்தரவை கலை மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளரும், பாரதியார் பல்கலைக்கழகக் கூடத்தின் துணைத் தலைவருமான முகமது அஹ்சன் ஆபித் பிறப்பித்துள்ளார். இதுவரை பொறுப்பு முதல்வராகப் பணியாற்றி வந்த உதவிப் பேராசிரியர் மீது விசாரணை ஒன்று நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவர் உடனடியாக அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், தன் வசமுள்ள பொறுப்புகள் அனைத்தையும் புதிய பொறுப்பு முதல்வர் போஸிடம் அவர் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என, அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இடமாற்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.