உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்.காங்., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு

என்.ஆர்.காங்., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர். காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தன், தொகுதி முழுதும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில், தட்டாஞ்சாவடி தொகுதி முழுதும் வீடு வீடாகச் சென்று ‘ஜக்கு’ சின்னத்திற்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.  பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் அவர்களின் குறைகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறிந்து, தொகுதியின் வளர்ச்சி, அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், மின்சாரம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பிரசாரத்தில் என்.ஆர். காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு ஓட்டு சேகரிப்புக்கு செல்லும் வேட்பாளர் அசோக் ஆனந்தனுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை