உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரித்த என்.ஆர்.காங்., வேட்பாளர்

25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரித்த என்.ஆர்.காங்., வேட்பாளர்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை சந்தித்து என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (6ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, என்.ஆர். காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதுவரை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து, தொகுதி மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டு ‘ஜக்கு’ சின்னத்திற்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், தொகுதியில் வீடு, வீடாகச் சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, தொகுதியின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என, உறுதியளித்தார். ஓட்டு சேகரிப்பின் போது, பொது மக்கள் வேட்பாளர் அசோக் ஆனந்தை மலர்துாவியும், ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் சிறப்பான வரவேற்று அளித்தனர். மேலும், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அசோக் ஆனந்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஓட்டு சேகரிப்பின் போது, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ