பெண் மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு
பாகூர்: கரையாம்புத்துார் அடுத்த பனையடிக்குப்பத்தை சேர்ந்தவர் குணபாலன்.தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லதா, 34; இவரது குடும்பத்திற்கும், எதிர் வீட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் குடும்பத்திற்கும் இடையே, கழிவு நீர் வாய்க்கால் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இவர்களுக்குள் பிரச்னை குறித்து கரையாம்புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 24ம் தேதி, பன்னீர்செல்வம் பைக்கில் சென்று, லதா மீது மோதியுள்ளார். இதில், காயமடைந்த லதா, தங்கள் குடும்பத்தினர் மீதான தொடர் தாக்குதல் குறித்து, கரையாம்புத்துார் போலீசில் புகாரளித்தார்.அதன் பேரில், பன்னீர்செல்வம், கிருஷ்ணவேணி, சென்பகவள்ளி, முத்தம்மாள், பரசுராமன், அருள்மொழி, விநாயகமூர்த்தி ஆகியோர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.