மேலும் செய்திகள்
த.வெ.க., நலத்திட்ட உதவிகள்
09-Feb-2025
புதுச்சேரி: உப்பளம், நேதாஜி நகரை சேர்ந்தவர் பெஞ்சமின், 72. இவர் கடந்த 1995ம் ஆண்டு, தனது அக்கா அதேல், தம்பி நெஸ்தர் ஆகியோருடன் இணைந்து அதே இடத்தில் புதிதாக வீடு கட்டினர்.நெஸ்தர் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்ததால், அந்த வீட்டை நெஸ்தர் பெயரில் எழுதி வைத்து விட்டு, தங்கள் காலம் வரை அங்கு வசித்து கொள்வதாக பெஞ்சமின், அவரது அக்கா அதேல் கூறி இருந்து வந்தனர்.கடந்த ஆண்டு நேஸ்தர் புதுச்சேரி வந்தபோது, அக்கா அதேலிடம் தகராறில் ஈடுபட்டு அந்த வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.நேற்று முன்தினம் உப்பளம் வீட்டிற்கு வந்த நெஸ்தர், அவரது மகன் ஆல்பர்ட், மகள் ஆலியாத் ஆகியோர், அங்கு வசித்து வரும் பெஞ்சமினிடம் வீட்டை விட்டு வெளியே செல்லும் படி தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கினர்.பெஞ்சமின் புகாரின் பேரில், ஓதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Feb-2025