உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு

தொழிலாளியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி, சாரம், அய்யப்பன் நகரை சேர்ந்தவர் அஜய் (எ) முருகன், 31; மார்க்கெட்டிங் தொழிலாளி. இவர் ‘கோ பிரி’ சைக்கிள் நிறுவனத்தில் பணியாற்றியபோது, நெல்லித்தோப்பை சார்ந்த பிரவீன் என்பவரை, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளார். இதற்கிடையே, அந்த நிறுவனம் மோசடி வழக்கில் சிக்கியதால், பிரவீன் தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப அளிக்கும்படி முருகனிடம் கேட்டதுடன், அது தொடர்பான வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.  இந்நிலையில், கடந்த 22ம் தேதி முருகன் தனது காரில் லாஸ்பேட்டைக்கு சென்றிருந்தபோது, பைக்கில் வந்த பிரவீன் மற்றும் சிலர் நாவற்குளம், ஏர்போர்ட் சாலையில் அவரது காரை வழிமறித்து, முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டு ஆபாசமாக திட்டி கல்லால் தாக்கினர். முருகன் புகாரின் பேரில், பிரவீன், கார்த்திகா, குமரன், இளம்பிறை, பிரகாஷ் ஆகியோர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி