உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இணைப்பு சாலை விரிசல் தலைமை பொறியாளர் ஆய்வு

இணைப்பு சாலை விரிசல் தலைமை பொறியாளர் ஆய்வு

புதுச்சேரி: ஆரியப்பாளையம் பாலம் இணைப்பு சாலையை, தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில், வில்லியனுார் அருகே சங்கராபரணி ஆற்றின் மீது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்துடன் இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆரியப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பாலத்தின் இணைப்பு சாலையில் விரிசல் விழுந்தது. இதுகுறித்து, நேற்று முன்தினம், தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் மற்றும் கட்டுமான ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் விரிசல் விழுந்த இடத்தில் நேற்று ஆய்வு செய்தனர். விரிசலை சரி செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை