உள்ளாட்சித்துறைக்கு முதல்வர் வாழ்த்து
புதுச்சேரி, : மத்திய அரசு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சான்றிதழ் பெற்ற உள்ளாட்சி துறைக்கு முதல்வர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்தார்.மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டமான பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தினை 2023-24ம் ஆண்டில் சிறப்பாக செயல்படுத்தியதிற்காக சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இடையே புதுச்சேரிமாநிலம் 2ம் இடம்பிடித்தது.இதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சர் மனோகர் லால் கட்டார் வழங்கிய சான்றிதழனை, உள்ளாட்சி துறை இயக்குநர் சக்திவேல் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, நகர மேம்பாட்டு முகமை திட்ட இயக்குநர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.