உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அத்தியாவசிய சேவைகள் இன்று செயல்படும் கலெக்டர் குலோத்துங்கன் அறிவிப்பு 

அத்தியாவசிய சேவைகள் இன்று செயல்படும் கலெக்டர் குலோத்துங்கன் அறிவிப்பு 

புதுச்சேரி : புதுச்சேரியில் அத்தியாவசிய சேவைகள் இன்று வழக்கம் போல தொடர்ந்து செயல்படும் என, கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்த செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று பந்த் மற்றும் கடை அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல தொடர்ந்து, செயல்படும்.மாணவர்கள் எந்த வித கவலையும் இன்றி, பள்ளிக்கு வருவதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல இயங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !