உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஸ்துாரிபா காந்தி செவிலியர் கல்லுாரியில் கல்லுாரி தினம்

கஸ்துாரிபா காந்தி செவிலியர் கல்லுாரியில் கல்லுாரி தினம்

பாகூர் : பிள்ளையார்குப்பம் கஸ்துாரிபா காந்தி செவிலியர் கல்லுாரியில், 'கிரெசிட்டா - 2024' என்ற தலைப்பில் கல்லுாரி தினம் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பத்தில் ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் கஸ்துாரிபா காந்தி செவிலியர் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியின் இந்திய மாணவர் செவிலியர் சங்கம் சார்பில், 'கிரெசிட்டா 2024' என்ற தலைப்பில் கல்லுாரி தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் சுமதி வரவேற்றார். மாணவர்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் பேராசிரியர் கார்த்திகேயன், கல்லுாரி முதல்வர் டாக்டர் புனிதா ஜோஸ்பின் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுச்சேரி பல்கலைக்கழக கலாசார மற்றும் கலாசார உறவுகளுக்கான இயக்குனரகத்தின் இயக்குனர் டாக்டர் கிளமென்ட் எஸ் லுார்து பங்கேற்று 'கற்றுக்கொள்வதற்கான ஆர்வம்' மற்றும் 'பயத்தை வெல்லும் திறன்' ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.சிறப்பு விருந்தினராக ஸ்ரீ பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் நிஹர் ரஞ்சன் பிஸ்வாஸ், விழாவையொட்டி நடத்தப்பட்ட இலக்கியம், நுண்கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.ஏற்பாடுகளை, கஸ்துாரிபா காந்தி செவிலியர் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி