உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

போக்குவரத்து இடையூறு வில்லியனுார் ஆரியப்பாளையம் பாலம் செல்லும் வழியில் மரக்கிளைகள் சாலையோரத்தில் வளர்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக ஏற்பட்டுள்ளது. ரஜினி முருகன், வில்லியனுார்.  உப்பளம் சாலையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. புவனேஷ், முதலியார்பேட்டை. மின் விளக்கு எரியவில்லை மரப்பாலம் முதல் நைனார்மண்டபம் வரை சென்டர் மீடினியனில் உள்ள மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. செல்வன், நைனார்மண்டபம்.  சாலையோரத்தில் மீன் கடைகள் உப்பளம் சாலையோரத்தில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கதிரவன், உப்பளம்.  குப்பைகள் சிதறி கிடக்கிறது தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. புவனேஸ்வரி, தவளக்குப்பம்.  தெரு விளக்கு எரியுமா? புதுச்சேரி, சாரம் பாலாஜி நகர் மெயின் ரோட்டில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. பாலாஜி, சாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை