புகார் பெட்டி
மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு கிருமாம்பாக்கம், மகாத்மா காந்தி கல்லுாரி எதிரே 200 மீட்டர் துாரம் மழைநீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். – பாபு, புதுச்சேரி. ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் இடவசதி தேவை புதுச்சேரி இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாமிற்கு வந்துள்ளோர் மழையில் கூட ஒதுங்க இடமின்றி பாதித்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கான இடத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். – சாந்தி, புதுச்சேரி. குப்பைகளால் துர்நாற்றம் கொசப்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் குப்பைகள் கொட்டி துர்நாற்றம் வீசுவதோடு, இங்குள்ள மக்களுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. – கிருஷ்ணா, புதுச்சேரி. மின்வெட்டால் மக்கள் பாதிப்பு கோவிந்தன்பேட்டை பகுதியில் குறைந்த மின்னழுத்தத்தால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், குடியிருப்புகளில் உள்ள மின் சாதன பொருட்கள் பாதிப்பதோடு, மக்கள் சிரமப்படுகின்றனர். –சிவா, கோவிந்தன்பேட்டை. விதிமுறை மீறும் வாகனங்கள் வில்லியனுாரில் வாகன ஓட்டிகள் பலரும் லைசென்ஸ் இல்லாமலும், மொபைல் பேசி கொண்டும் வாகனங்கள் ஓட்டுகின்றனர். சிறுவர்கள் கூட வாகனங்களை தாறுமாறாக ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேணடும். – ரஜினிமுருகன், வில்லியனுார்.