மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
அரியாங்குப்பம்: வீட்டு மொட்டை மாடியில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி கட்டட மேஸ்திரி உயிரிழந்தார்.வில்லியனுார், ஆச்சாரியாபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகர், 47; வீடு கட்டும் மேஸ்திரி. வழுதாவூர் பேட்டையன் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு சொந்தமான வீடு முருங்கப்பாக்கம் அரவிந்தர் வீதியில் உள்ளது. நேற்று அந்த வீட்டின் மொட்டை மாடியில், கொத்தனார்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அதில், ஞானசேகர் கம்பி கட்டும் வேலை செய்தார். அப்போது, வீட்டு மொட்டை மாடியின் மேலே சென்ற மின் கம்பியில் இருந்து மின்சாரம் ஞானசேகர் மீது தாக்கியது. அதில் துாக்கி வீசப்பட்ட அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அவுரது மனைவி தனலட்சுமி, பாதுகாப்பில்லாமல் வேலை வாங்கிய வீட்டு உரிமையாளர் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago