உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறுவடை இயந்திரம் மோதி கட்டட தொழிலாளி பலி

அறுவடை இயந்திரம் மோதி கட்டட தொழிலாளி பலி

பாகூர்: நெல் அருவடை இயந்திரம் மோதிய விபத்தில், படுகாயமடைந்த சென்ட்ரிங் தொழிலாளி இறந்தார். விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர், கீழ்பாதி, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 26;  சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஹோண்டா டியோ பைக்கில் (டி.என். 15 எம்.இ. 3487) கரையாம்புத்துார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த நெல் அறுவடை இயந்திரம், பைக் மீது மோதியது. படுகாயமடைந்த ரமேஷை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரமேஷின் சகோதரர் சவுந்தர் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், விபத்து ஏற்படுத்திய நெல் அருவடை இயந்திரத்தின் டிரைவர் விழுப்புரம் மாவட்டம், களர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் மீது, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை