உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள்; பிள்ளைகளுக்கு பரிசு வழங்க முடிவு

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள்; பிள்ளைகளுக்கு பரிசு வழங்க முடிவு

புதுச்சேரி : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெறும் பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.இது குறித்து புதுச்சேரி பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழொளி, துணை தலைவர் ராஜசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ஆகிய பொது தேர்வுகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, உறுப்பினர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில், பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக 2 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.உறுப்பினர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை சங்க அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 11ம் தேதிக்குள் புதுச்சேரி இளங்கோ நகர் காமராசர் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ