உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை விபத்தில் தம்பதி படுகாயம்

சாலை விபத்தில் தம்பதி படுகாயம்

பாகூர்: கன்னியக்கோவில் அருகே சாலை விபத்தில் தம்பதி படுகாயமடைந்தனர்.கடலூர் மாவட்டம், மாளிகம்பட்டை சேர்ந்தவர் கார்த்திக், 33; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 18ம் தேதி, தனது மனைவி ரேணுகாவுடன், 25; புதுச்சேரியில் உள்ள ராஜிவ் காந்தி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். புதுச்சேரி - கடலூர் சாலை, கன்னியக்கோவில் சந்திப்பு அருகே வந்த இவர்கள், சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அவ்வழியாக வந்த தோஸ்த் மினி லாரி, பைக் மீது மோதியது. இதில், இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி