உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம்

பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம்

வில்லியனுார் : புதுச்சேரி வேளாண் துறை தொண்டமாநத்தம் உழவர் உதவியகம், பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் நடப்பாண்டிற்கான ரபி பருவம் பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம் தொண்டமாநத்தம் கிராமத்தில் நடந்தது.தொண்டமாநத்தம் உழவர் உதவியாக வேளாண் அலுவலர் சங்கரதாஸ் தலைமை தாங்கினார். முகாமில் தொண்டமாநத்தம், ராமநாதபுரம், பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் குறித்து மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரி இளநிலை இறுதி ஆண்டு மாணவியர் எடுத்து கூறினர். வில்லியனுார் வேளாண் இணை இயக்குனர் அலுவலக பி.டி.எம் ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை