உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.எல்.ஏ.,க்களை மிரட்டிய சைபர் கிரைம் கும்பலுக்கு வலை புதுச்சேரியில் பரபரப்பு 

எம்.எல்.ஏ.,க்களை மிரட்டிய சைபர் கிரைம் கும்பலுக்கு வலை புதுச்சேரியில் பரபரப்பு 

புதுச்சேரி: எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாஜி எம்.எல்.ஏ.,க்களை வீடியோ காலில் தோன்றி மிரட்டிய சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு புகார்களை விட சைபர் கிரைம் மோசடி புகார்களே அதிகம் பதிவாகி வருகிறது. தினசரி புது புது விதங்களில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். சைபர் கிரைம் மோசடி கும்பல் தினசரி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், பலர் சைபர் கிரைம் மோசடிக்காரர்களிடம் சிக்கி பணத்தை இழப்பதும் தொடர் கதையாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாஜி எம்.எல்.ஏ.,க்களும் சிக்கியிருப்பது அம்பலமாகி உள்ளது.புதுச்சேரி மற்றும் வேறு பிராந்தியத்தை சேர்ந்த இரு தேசிய கட்சிகளின் இரு எம்.எல்.ஏ.,க்களும், மாஜி எம்.எல்.ஏ., என 3 பேர் சைபர் கிரைம் மோசடிக்காரர்களின் வலையில் சிக்கியுள்ளனர்.மூவரையும் தனித்தனியாக கடந்த சில நாட்களுக்கு முன் சைபர் கிரைம் மோசடி கும்பல் வீடியோ காலில் தொடர்பு கொண்டது. வீடியோ காலை அட்டன்ட் செய்தவுடன், மறுபக்கத்தில் நிர்வாணமாக ஒரு பெண் தோன்றியுள்ளார். அடுத்த சில நிமிடத்தில் அந்த வீடியோ கால் இணைப்பை மூவரும் துண்டித்து விட்டனர்.அடுத்த சில நிமிடத்தில் சைபர் கிரைம் மோசடி கும்பல், எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு நீங்கள் நிர்வாணமான பெண்ணுடன் பேசும் வீடியோ பதிவு உள்ளது. குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் வீடியோவை வெளியிட மாட்டோம். மறுத்தால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டினர்.இதுகுறித்து மூவர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார், மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'யார் என்று தெரியாத நம்பரில் இருந்து வரும் வீடியோ கால்களை எடுக்க வேண்டும். சைபர் கிரைம் மோசடி கும்பல், அப்பாவி மக்களின் வங்கி கணக்கு விபரங்களை பெற்று அதில் மோசடி செய்கின்றனர். எனவே, வங்கி கணக்கு விபரங்களை யாரிடமும் கொடுக்க வேண்டாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ