மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சிறப்பு துப்புரவு முகாம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் பணியினை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்தார்.புதுச்சேரி, உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் உத்தரவின் பேரில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சுத்துக்கேணி கிராமத்தில் ஹெச்.ஆர். ஸ்கொயர் தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் சிறப்பு துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் பணி நடந்தது. இதனை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்து, பொதுமக்கள் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஹெச்.ஆர். ஸ்கொயர் நிறுவனத்தினர் வீடுகளுக்கு வரும் போது, குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை சாலையில் வீசுவதை தவிர்த்து, அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதுதொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொது மக்களுக்கு வீடு, வீடாக சென்று வழங்கினார். பின்னர், சாலையோர குப்பைகள் ஊழியர்கள் அகற்றினர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago