உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிக்கு பாலியல் தொல்லை ‘போக்சோ’வில் டிரைவர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை ‘போக்சோ’வில் டிரைவர் கைது

காரைக்கால்: காரைக்காலில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். காரைக்கால் பகுதி அரசுப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி, அவரது உறவினர் அடிக்கடி வீட்டுக்கு செல்லும்போது அவருக்கு கீழ மனை பகுதியை சேர்ந்த லோடு வேன் டிரைவர் கார்த்திகேயன், 23, என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறினார். இது குறித்து நேற்று முன்தினம் நிரவி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கார்த்திகேயனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ