மேலும் செய்திகள்
வங்கியாளர்கள் குழும கருத்தரங்கு
30-Aug-2024
பாகூர்: கிருமாம்பாக்கம் ராஜிவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் மற்றும் கிருமாம்பாக்கம் ராஜிவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் போதைப் பொருள் தடுப்பு மற்றும் என்.எஸ்.எஸ்., பிரிவு சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு 2 நாள் கருத்தரங்கு நடந்தது.கருத்தரங்கிற்கு, தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். சிறப்பு அதிரடி பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பேசினர். கேர் மேக்ஸ் பவுன்டேஷன் நிறுவனர் சூரியபிரசன்னன், ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு முக்கியத்துவம் குறித்து பேசினர். கல்லுாரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா, துணை முதல்வர் அய்யப்பன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
30-Aug-2024