உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

புதுச்சேரி: கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகி தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அரசு சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மணிமாறன், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் பிரியதர்ஷினி, காவியா, ஸ்ரீ கல்யாண் ஆகியோர் பங்கேற்று போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான சிகிச்சை முறைகள், போதை பொருள் விற்பனை செய்பவர்களுக்கான தண்டனை விவரங்கள், புற்றுநோய், காசநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர்கள் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு குறித்து பேசினர்.  ஆசிரியர் தாமரை செல்வி தலைமையில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் பச்சையப்பன், உடற்கல்வி ஆசிரியர் ரகுராமன், ஆசிரியர் செல்வகுமார் மற்றும் ஆசிரியர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், மாணவர்கள் ‘ நம் நாட்டை புகையிலை இல்லா நாடாக மாற்றுவோம்’ என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை