மேலும் செய்திகள்
தடையை மீறி ஆர்ப்பாட்டம்
25-Feb-2025
புதுச்சேரி : கொசுக்களை ஒழிக்க வலியுறுத்தி, இந்திய கம்யூ., தட்டாஞ்சாவடி தொகுதிக்குழு சார்பில், உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன் கொசு வலை போர்த்திக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளர் தென்னரசன் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் சேதுசெல்வம் துவக்கி வைத்து, பேசினார். இதில், புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொசு தொல்லையால் டெங்கு உள்ளிட்ட நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தட்டாஞ்சாவடி தொகுதி யில் தனியாருக்கு சொந்தமான காலிமனைகளில் தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. நகராட்சி துப்புரவு பணி யாளர்களை மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.மாநிலக் குழு உறுப்பினர்கள் முருகன், எழிலன், ஹேமலதா, செல்வம், தொகுதி பொருளாளர் தனஞ்செழியன், தொகுதிக் குழு உறுப்பினர்கள் முருகன், லோகு உட்பட பலர் பங்கேற்றனர்.
25-Feb-2025