இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
புதுச்சேரி: விண்ணப்பம் பெற்ற அரசு காலிப் பணியிடங்களுக்கு விரைந்து தேர்வுகளை நடத்திட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி நகரக்குழு கூட்டம் முதலியார்பேட்டை இந்திய தொழிற்சங்க மைய அலுவலகத்தில் நகரக்குழு செயலாளர் ரஞ்சித்குமார் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், மாநில செயலாளர் சஞ்சய்சேகரன் கலந்து கொண்டனர். விண்ணப்பம் பெற்ற அரசு காலிப் பணியிடங்களுக்கு விரைந்து தேர்வுகளை நடத்திட வேண்டும். காலியாக உள்ள 10 ஆயிரம் காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும். புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தி முறைப்படுத்திட வேண்டும். பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் புதிய நகரக்குழு தலைவராக ஜீன் லூயிஸ், செயலாளராக ஸ்ரீதர், பொருளாளராக ஜஸ்டின் நெல்சன் ராஜ், துணை தலைவராக விண்ணரசன், துணை செயலாளராக பாபு, நகரக்குழு உறுப்பினர்களாக கமலவேலன், கவியரசன், பிரதீப், பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.