உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நீக்க ஊழியர்கள் உண்ணாவிரதம்

பணி நீக்க ஊழியர்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரி: பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள், மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி, பொதுப்பணித்துறையில் 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், தேர்தல்துறை மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், அரசு உடனடியாக மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி நேற்று சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் 100க்கும் ஊழியர்கள், நெற்றியில் பட்டை நாமம் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி