மேலும் செய்திகள்
வரும் 21ல் 'வேலை ரெடி' வாய்ப்பை தவற விடாதீங்க!
14-Feb-2025
புதுச்சேரி: தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பகம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் வரும் 15ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தொழிலாளர் துறை இயக்குனர் யாசம் லஷ்மி நாராயணாரெட்டி செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் சார்பில் வரும் 15ம் தேதி லாஸ்பேட்டை, அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 9:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடக்கும் முகாமில் 2,000க்கும் மேற்பட்ட காலி பணி இடங்களை நிரப்புவதற்காக, புதுச்சேரி, தமிழகத்தை சார்ந்த 40 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது சுபவிபரம் மற்றும் கல்வித் தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
14-Feb-2025